Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாத வழிபாடு! நரசிம்ஹ ஜெயந்தி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நல்லறிவு தரும் தெய்வங்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2017
03:06

அண்ட சாரசரங்களைப் படைத்து ஆட்சி செய்துவருபவள் ஆதிசக்தி. உலகை இயக்கி ஐந்தொழில்களைப் புரிந்துவரும் சக்தியானவள் தனக்கென்று ஒரு பெயரும் வடிவமும் இல்லாதவளாயினும், பக்தர்களுக்கு அருள்புரியும் பொருட்டு பல பெயர்களையும் வடிவங்களையும் கொண்டு திகழ்கிறாள். மனோன்மணி, சர்வ பூதமணி, பலப்பிரதமணி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரௌத்ரி, சேட்டை, வாமை ஆகிய சக்திகள் நவசக்திகள் எனப்படுகின்றனர். பிராம்மி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, வாராகி, கவுமாரி, இந்திராணி, சாமுண்டி ஆகிய எழுவரும் சப்தமாதர்கள் எனப்போற்றப்படுகின்றனர். மிகவும் பழமையான கோவில்களில் சப்தமாதர்கள் எனப்படும் ஏழு கன்னியரின் சிலைகளையும் அவர்களுக்கு இருபுறமும் வீரபத்திரர். விநாயகர் ஆகிய இரு தெய்வங்களின் உருவங்களையும் காணலாம். முற்காலத்தில் ஏழு கன்னியரும் தனியாக சிறு கோவில்களில் இருந்ததாகவும், அவை சிதிலமடைந்துவிட்டதால் அந்தச் சிலைகளை கோயில் பிராகாரத்தில் வைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏழு கன்னியர்களுடன் யோகேஸ்வரி என்ற பெண் தெய்வத்தையும் சேர்த்து எட்டு மாதர்கள் என்றும் கூறுவர். ஏழு கன்னியர் தோற்றத்தைப் பற்றிய வரலாறு ஒன்று கூறப்படுகிறது. பிரகலாதனுக்குப்பின் அந்த காசுரன் ஆட்சிக்கு வந்தான். பிறவிக் குருடனான அவன் பிரம்மனைக் குறித்துத் தவமிருந்து பார்வையையும் ஒருவராலும் வெல்லப்படாத வலிமையையும் பெற்று தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். அவனது கொடுமைகளைத் தாங்காத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று வேண்டினர். அந்தகாசுரன் தேவர்களைத் துன்புறுத்திய தோடல்லாமல், பார்வதிதேவியையே மோகித்து அவளைக் கவர்ந்து செல்ல கயிலை நோக்கிச் சென்றான். அங்கு சிவபெருமானுக்கும் அந்தகாசுரனுக்கும் இடையே போர் மூண்டது.

சிவபெருமானின் சூலத்தால் அசுரன் காயம் பட்டபோது, அவன் உடம்பிலிருந்து சிந்திய ரத்தத்திலிருந்து ஆயிரக்கணக்கான அசுரர்கள் தோன்றிப் போரிட்டனர். சிவபெருமான் அவர்களுடனும் கடுமையாகப் போரிட்டார். அசுரன் உடம்பிலிருந்து வெளியேறும் ரத்தம் தரையில் விழுவதைத் தடுக்க சிவபெருமான் யோகேஸ்வரி என்ற சக்தியைத் தோற்றுவித்தார். யோகேஸ்வரிக்கு உதவியாக பிரம்மன். மகேஸ்வரன், திருமால், வராக மூர்த்தி, முருகன், இந்திரன், எமன் ஆகிய எழுவரும் தங்கள் சக்திகளையும் அனுப்பிவைத்தனர். அவர்களே சப்த மாதர்கள். இவர்கள் எண்மரும் அந்தகாசுரனின் உடலிலிருந்து வெளியேறிய ரத்தம் தரையில் சிந்தாமல் பருகினர். அதனால் அசுரர்கள் மேலும் மேலும் தோன்றுவது நின்றுபோனது. அந்தகாசுரன் வலிமை இழந்து சிவபெருமானால் அழிக்கப்பட்டான். சிவபெருமானின் அட்ட வீரட்டச் செயல்களுள் இதுவும் ஒன்று. இது நடந்த தலம் திருக்கோவிலூர்.

சிவபெருமானுக்கும் அந்தகாசுரனுக்கும் இடையே நடந்த போரை அறிவுக்கும் அறியாமைக்கும் இடையே நடந்ததாகக் கொள்ளலாம். கோபம், காமம், பேராசை போன்ற தீய குணங்களை அறிவின் துணைகொண்டு அடக்கத் தவறினால் அறியாமை அதிகரிக்கும். அழிவு நேரிடும் அறிவினால் தீய குணங்களை அடக்கிவிட்டால் அறியாமை அழிந்து நலம்பெறலாம். இதுவே சிவபெருமானுக்கும் அந்தகாசுரனுக்கும் இடையே நடந்த போர் உணர்த்தும் தத்துவம் என வராக புராணம் கூறுகிறது. மாதர்கள் எண்மரும் குடித்த அசுரர்களின் ரத்தம் தீய குணங்கள் எட்டையும் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. யோகேஸ்வரி குடித்தது-ஆசை; மாகேஸ்வரி - கோபம்; வைஷ்ணவி - பேராசை; பிராம்மி - ஆணவம்; கவுமாரி - மாயை ; இந்திராணி - குற்றம்காணல்; சாமுண்டி - கோள் சொல்லுதல்; வாராகி - பொறாமை இந்த பெண் தெய்வங்களால் தீய குணங்கள் எட்டும் அழிக்கப்பட்டன என்பதே இவ்வரலாறு கூறும் செய்தி.

சிவபெருமானுக்கு உதவியாக ஏழு சக்திகள் அனுப்பப்பட்டமையால், சிவனின் மூத்த குமாரன் விநாயகரும், சிவபெருமானுடைய அம்சமான வீரபத்திரரும் கோயில்களில் சப்த மாதர்களின் உருவச் சிலைக்களுக்கு இருபுறமும் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஆகம விதிகளின்படி சப்த மாதர்களும் இடக்காலை மடித்தும், வலக்கால் தொங்கிய நிலையிலும் அமர்ந்த கோலத்தில் இருப்பதைக் காணலாம். எழுவரும் நான்கு கரங்களைக் கொண்டு திகழ்கிறார்கள். அவர்களது முன்னிரண்டு கைகளில் அபயவரத முத்திரையும்; பின்னிரண்டு கைகளில் அந்தந்த சக்திகளோடு தொடர்புடைய கடவுளரின் படைக்கலங்களையும் காணலாம். பிராம்மியின் பின் கைகளில் கமண்டலம் ஜபமாலை; வைஷ்ணவியின் பின் கைகளில் சங்கு, சக்கரம், மாகேஸ்வரி -சூலம், மான்; வாராகி- கதை, சக்தி; இந்திராணி - வஜ்ரம், சக்கரம்; கவுமாரி -சூலம் வேல்; சாமுண்டி -கபாலம், சூலம்.

சப்தமாதர்களின் ஊர்திகளும் அந்தந்த கடவுளரின் ஊர்தியாகவே இருக்கும். பிராம்மிக்கு அன்ன ஊர்தியும், அதைத் தொடர்ந்து வரிசைப் படி கருட ஊர்தி, காளை ஊர்தி, சிங்க வாகனம், யானை வாகனம், மயில் வாகனம் என்றிருக்கும். சாமுண்டியின் இருக்கை மனித உடல். தன்னை அவமதித்த தக்கனது பெருவேள்வியைத் தகர்க்க சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட வீரபத்திரரின் தோற்றம் பொதுவாக அச்சம் தருவதாக இருக்கும். ஆனால் ஏழு மாதர்களுடன் வீரபத்திரரின் வடிவத்தை அமைக்கும்போது அவரது பார்வையில் சாந்தம் நிறைந்திருக்கும். முன்னிரு கைகளில் அபய, வரத முத்திரைகளும்; பின்னிரு கைகளில் சூலம், கதையும் கொண்டு பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் இருப்பார். இந்த தெய்வ வடிவங்களை வணங்கினால் நம் மனதிலுள்ள தீமைகள் விலகி நல்லறிவு வளரப்பெறலாம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar