Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உழைத்து வாழ்வதே உண்மையான சுகம் இந்த வாரம் என்ன
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எச்சரிக்கையாய் வாழு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2017
05:06

எதிரி யார், நண்பன் யார் தெரிந்துகொள்! தனிமையில் உள்ளத்தில் ஆழ்ந்து தக்க திட்டங்களைத் தீட்டு! முன்னோர் வாழ்வை நினைவில் கொண்டு முயற்சியைக் கைவிடாமல் முன்னேறு! தொடர்ந்து செயல்படு! தொய்வடையாதே! தோழர்களோடிரு! துளியும் தளராதே! தன் தச்போத்என்ற நூலில் வீரசிவாஜிக்கு, சமர்த்த ராமதாசர் சொன்ன அறிவுரை இது. பாரத நாட்டு மகான்கள் தர்மத்திற்காகவும், பிறருடைய நன்மைக்காகவுமே வாழ்ந்தனர். துறவறம் பூண்டவர்களும் இல்லறத்தாரின் நன்மைக்காகவே நாட்டில் வாழ்ந்து நல்ல அறிவுரைகள் கூறினர். அந்த வரிசையில், இந்து தர்மத்தை நிலைநாட்டும் மிகப்பெரிய பணியை வீர சிவாஜி மூலம் செய்து காட்டியவர் ஸ்ரீ சமர்த்த ராமதாசர். மகாராஷ்டிராவிலுள்ள ஜம்ப் கிராமத்தில், சூர்யாஜிராணுபாய் தோஸார் தம்பதிக்கு 1608ம் ஆண்டு, ராமநவமியன்று பிறந்தார். அவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் நாராயண் சூர்யாஜி பந்த் குல்கர்னி தோஸார். குழந்தையாய் இருக்கும்போது ஒரு நாள் வெகுநேரம் தியானம் செய்ததைக் கண்டு இவருடைய அன்னை,மகனே! யாருக்காக இத்தனை நேரம் தியானம் செய்கிறாய்? என்று கேட்கவும்,உலக நன்மைக்காக அம்மா!என்று அவர் பதில் சொல்ல, அன்னை திகைத்து நின்றார்.

ராமரைத் தொந்தரவு செய்யாதீர்கள்! என்ன வேண்டும் உங்களுக்கு? நான் செய்து தருகிறேன்!என்பாராம் அனுமன். அந்த அனுமனைப் பூஜித்து ராம தரிசனம் அடைந்தார் நாராயண். அப்போது அவருக்கு எட்டு வயது. ஸ்ரீ ராமரே குருவாக இருந்து அவருக்கு ராமதாஸ் என்று பெயரிட்டார். 12 வயதில் அவருக்கு திருமணம் நிச்சயமானது. மணப்பெண்ணுக்கும், தனக்கும் நடுவே திரையொன்று விரித்து மந்திரம் சொல்லும் தருணத்தில், மணப்பந்தலிலிருந்து ஓடிவிட்டார் மாப்பிள்ளை. கோதாவரியை நீந்திக் கடந்து, கோதாவரியும் நந்தினி நதியும் சந்திக்கும் இடத்தில் கரையோரம் நடந்து ஒரு குகையில் வசிக்கத் துவங்கினார்.  இடைவிடாமல்ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம்மந்திரத்தை ஜெபித்தார். மீண்டும் ஸ்ரீ ராமர் தோன்றி அவரை 12 ஆண்டுகள் தீர்த்த யாத்திரைக்கு அனுப்பி, கிருஷ்ணா நதியோரம் தங்குமாறு பணித்தார். அங்கே, பல மகான்கள் அவரை சந்தித்தனர். சென்ற இடங்களிலெல்லாம் அவருக்குச் சீடர்கள் கூடியதால், தர்மப் பிரசாரத்திற்காக அவர் மடங்களை நிறுவினார். இதற்கிடையில், தன் பிரிவால் அழுதழுது தனது தாயார் கண் பார்வையை இழந்துவிட்டார் என்பதைக் கேள்விப்பட்டு அவரைக் காணச் சென்றார். தாயின் கண்களைத் தடவிய கணமே அவர் பார்வை மீண்டது. அன்னைக்குக் கபில கீதையை உபதேசித்து விடைபெற்றுக் கொண்டார். பதினொரு அனுமன் கோவில்களை நிறுவியபின், சம்பவத் என்னுமிடத்தில் ராமருக்குக் கோயில் எழுப்பினார். அந்தக் கோவிலில் ஸ்ரீராமநவமி கொண்டாட ஏற்பாடு செய்தார். அதன் பிறகே ஸ்ரீராமநவமி நாடெங்கும் வைபவமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அப்போதுதான் வீர சிவாஜி, இந்து சாம்ராஜ்யத்தை நிறுவும்  பெரு முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதற்கு அருளாசி வேண்டி ராமதாசரைத் தேடி வந்தார். அவருடைய தரிசனம் எளிதில் கிடைக்கவில்லை. அன்னை பவானியின் முன்பு உருகிய சிவாஜியின் கனவில், ராமதாசரின் தரிசனம் கிடைத்தபின் நேரில் அவரைச் சந்திக்கும் பாக்கியம் பெற்றார். அவரைத் தன் குருவாகக் கொண்டார். அவருடைய அருளாற்றலைக் கண்டு பிரமித்து, துறவறம் பூண்டு அவருடனேயே இருக்க விரும்பினார். ஆனால், ராமதாசர் சிவாஜியிடம்,நீ க்ஷத்திரியன். இந்த நாட்டை ஒன்றுபடுத்துவதும், பகைவர்களை வெல்வதும் உன் தருமம். நீ மக்களைக் காக்கப் பிறந்தவன். உயிரே போனாலும் உன் தர்மத்தைக் கைவிடாதே. எனக்கு சேவை செய்யவேண்டும் என்னும் ஆசையில் கடமையைத் துறக்காதே! நீ நினைக்கும் போதெல்லாம் நான் உன் முன்பு இருப்பேன்!என்று அறிவுரை கூறினார்.

அவரது பாதுகைகளைத் தனது அரியணையில் வைத்து ஆட்சி செலுத்தத் துவங்கினார் சிவாஜி.இது ராமனின் ராஜ்யம், நீ ராமனின் பிரதிநிதி என்னும் நினைவுடன் செயல்படு!என்று உபதேசித்தார் குரு. அப்படியே வாழ்ந்தார் சீடர் சிவாஜி. குருநாதர் சீடனுக்கு என்ன பொருள்களைத் தந்தார் தெரியுமா? ஒரு தேங்காய் வளமையைக் குறிக்க. கைப்பிடி மண்பூமியை வெல்ல. சில கற்கள்மலைக்கோட்டைகள் எழுப்ப. சாணம்குதிரைப் படையை உருவாக்க. அவருடைய அருளால், சிவாஜி எந்தக் குறையுமின்றி வாழ்ந்தார். ராமதாசருக்கு இருந்த 1100 சீடர்களில் 300 பேர் பெண்கள். நாடு முழுவதும் தனது சீடர்களை, இந்து தர்மத்தை நிலைநாட்டப் பாடுபடும்படி பணித்தார். அவருடைய மடங்கள் காசியிலிருந்து ராமேஸ்வரம் வரை பல ஊர்களில் நிறுவப்பட்டன.

அவர் பல நூல்களை இயற்றினார். அவற்றுள் தசபோத்பெரிதும் பிரபலமானது. பல சோதனைகளுக்குப் பிறகும், இன்றைக்கு இந்து சமுதாயம் மலர்ச்சியுடனும், தெம்புடனும் இருந்து வருகிறதென்றால்,  அதில் ராமதாசரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. பகைவர்களால் இந்து தர்மத்திற்கு ஏற்பட்ட பேராபத்தை, ஓர் இளைஞனுக்கு அருள் செய்து, அவனை மாவீரனாக்கி எதிர்த்தார். இந்து தர்மத்தைக் காப்பதற்காக, மிகவும் சக்தி வாய்ந்த பகைவரைத் திறமையோடு எதிர்த்து வெற்றி கண்டவர்களை சிவாஜிக்கு முன்பும் பின்பும் நாம் காணவில்லை. ஆகவே, சிவாஜி கண்ட வெற்றி, ராமதாசரின் அருளாற்றலின் நேரடி விளைவே என்பது நிரூபணமாகிறது. சாமர்த்தியம் மிக்கவரைச் சமர்த்தர் என்பார்கள். இந்த அடைமொழியை ராமதாசரின் பெயருடன் இணைத்து, சமர்த்த ராமதாசர்என மக்கள் அழைத்தனர். 1681ல், ஒருநாள் தான் உலகை விட்டு நீங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதென அறிந்து, அதைச் சீடர்களுக்கு தெரிவித்தார். ராமர் முன்பு தியானத்தில் அமர்ந்த அவருடைய வாயிலிருந்து ஒரு ஜோதி எழுந்து, கருவறையில் நுழைந்து ராமருடன் ஐக்கியமானது. இந்துதர்மத்தைக் காப்பதற்காக, மிகவும் சக்தி வாய்ந்த பகைவரைத் திறமையோடு எதிர்த்து வெற்றி கண்டவர்களை சிவாஜிக்கு முன்பும் பின்பும் நாம் காணவில்லை

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar