நபிகள் நாயகம் புதிய ஆடை அணியும் போது அதன் பெயரைச் சொல்லியபடி, யா அல்லாஹ்! நன்றி அனைத்தும் உனக்கே. நீயே எனக்கு இதனை அணி வித்தாய். நான் உன்னிடம் இதன் நன்மையைக் கேட்கின்றேன். இது எந்த நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்டதோ, அதன் நன்மை யான அம்சத்தைக் கோருகின்றேன். இந்த ஆடையின் தீமையான அம்சத்தை விட்டும் உன் பாதுகாப்பைத் தேடுகின்றேன், என்பார். அதாவது, அந்த ஆடையை உடுத்தி இருக்கும் நேரத்தில் நன்மையை மட்டுமே செய்ய வேண்டும். தீமையான செயல்கள் எதுவும் செய்து விடக் கூடாது என்று அவர் கேட்கிறார். புத்தாடை மட்டுமல்ல, எந்த ஒரு பொருள் கிடைத்தாலும், அதைக் கொண்டு நன்மையே செய்ய வேண்டும் என்பதை, இந்தச் செயல் மனித குலத்துக்கு எடுத்துக் காட்டுகிறது.