நூலகத்தில் சிலர் புத்தகங்களை எடுத்துக் கொண்டு காணாமல் போய்விடுவார்கள். சிலர் நண்பர்களிடம் வாங்கிய புத்தகத்தை திருப்பிக் கொடுப்பதே இல்லை. சிலர் பக்கத்து வீட்டுக்காரர்கள் நம் வீட்டுக்கு பண்டங்கள் கொடுத்தனுப்பிய பாத்திரத்தை திருப்பித் தர மனமில்லாமல் இருப்பார்கள்.
இதெல்லாம் கூடாது என்கிறது இஸ்லாம். ஆரியாநிறைவேற்றப்படும்,மின்ஹாதிருப்பித் தரப்படும். ஆரியாஎன்றால்கடன் வாங்கிய பொருள் . ஒருவரிடம் ஒரு பொருளை இரவலாக வாங்கினால், அதைப் பயன்படுத்திவிட்டு திரும்பக் கொடுத்து விட வேண்டும். நீண்ட நாள் வைத்துக் கொண்டு, தந்தவர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தக்கூடாது. மின்ஹாஎன்றால் பெண் ஒட்டகம். அரபுநாட்டில் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பெண் ஒட்டகங்களை பால் கறக்க தருவது வழக்கம். பாலைக் கறந்து கொண்டு, ஒட்டகத்தை தந்தவரிடமே திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. இதை முறையாக செய்ய வேண்டும் என்கிறது குர்ஆன். வாங்கிய பொருளை உரியவர்களிடம் திருப்பிக் கொடுப்பதே முறையானது.