காரியாபட்டி, காரியாபட்டி- நரிக்குடி ரோட்டில் புதிதாக சாய்நாதர் நாகசாயி கோயில் கட்டப்பட்டு, பளிங்கு கற்களால் சாய்பாபா சிலை மற்றும் பரிவார தெய்வங்களான நாகசாயி, பாலமுருகன், வெங்கடேசபெருமாள், மகாலட்சுமி சிலைகள் பிரதிஷ்டை செய்து நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. வெங்கடேச சர்மா தலைமையில் சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் நடத்தினர்.பல்வேறு பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை மதுசாய் ஸ்ரீஷீரடி சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருளாசி பெற்றனர். அன்னதானம் நடந்தது.