பதிவு செய்த நாள்
20
ஜூலை
2017
12:07
சென்னிமலை: ஆடி கிருத்திகையை முன்னிட்டு, சென்னிமலை முருகன் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை சிறப்பாக கருதப்படுகிறது. அன்று பக்தர்கள் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வேண்டுதல் வைப்பர், இந்தநாளில் வேண்டுதல் வைத்தால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். இதன்படி, சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று அதிகாலை முதலே கூட்டம் அதிகமாக இருந்தது. கோ பூஜை காண ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். மாலை வரை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து, கும்பல் கும்பலாக பக்தர்கள் வேன் மூலம் வந்து, பால், தயிர் உட்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்து, முருகனை வழிபட்டனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில் பஸ் இரண்டும் இயக்கப்பட்டது.
* இதேபோல், பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில், கனககிரி குமரன்மலை, வேலாயுதசுவாமி கோவிலில், ஆடிக்கிருத்திகை முன்னிட்டு, நேற்று, சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் நடந்தன. இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த, நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.