சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா 26ம் தேதி தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2017 01:07
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் வருடந்தோறும் ஆடித்தபசு திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழா நடைபெறும் நாட்களின் போது அம்மனும்,சுவாமியும் சிம்மம்,அன்னம்,கமலம்,யானை,விருட்சம். காமதேனு குதிரை,போன்ற வாகனங்களில் வீதிவுலா வருவர். இந்த வருடம் வருகிற 26 ந் தேதி காலை 10:15 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.முக்கிய விழாவான ஆடித்தபசு மண்டகப்படி வருகிற அடுத்த மாதம் 4ந் தேதி நடைபெற உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் முருகேசன், ஸ்தானீகர் அழகிய சுந்தர பட்டர் ஆகியோர் செய்து வருகின்றனர்.