புதுச்சேரி: புதுச்சேரி எல்லைபிள்ளைச்சாவடி விவேகானந்தா நகரில் உள்ள வலம்புரி செல்வ விநாயகர் கோவிலில் விளக்கு பூஜை வரும் 26ம் தேதி நடக்கிறது. வலம்புரி செல்வ வினாயகர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஆடிப்பூரம் துர்கை ஸ்ரீமத் ஆண்டாள் அம்பாளுக்கு வரும் 26ம் தேதி மாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து லலிதா சஹஸ்ர நாம பாராயணத்துடன் ’விளக்கு பூஜை விழா’ துவங்குகிறது. விளக்கு பூஜையில் கலந்து கொள்பவர்கள் குத்துவிளக்கு, மணி, தட்டு, பஞ்சபாத்திரம் கொண்டு வரவேண்டும். விளக்கு பூஜையில் கலந்துகொள்ள ரூ.250 செலுத்த வேண்டும். வரும் 27ம் தேதி ராகு கேது பெயர்ச்சி விழா நடக்கிறது. அன்று காலை 11.30 மணிக்கு சிறப்பு ஹோமம், அபிஷேக ஆராதனையில் பங்கேற்க நபர் ஒன்றுக்கு ரூ.100 செலுத்தி பெயரினை பதிவு செய்துகொள்ளலாம்.