Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
படவேட்டம்மனுக்கு 28ல் கும்பாபிஷேகம் மழை வேண்டி மாணவர் வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவில் திருவிழா: அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2017
01:07

ஓசூர்: தேன்கனிக்கோட்டையில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, முதுகில் அலகு குத்தி, கிரேன் மூலம் தொங்கியபடி வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை நகரில் உள்ள உத்தண்டி மாரியம்மன், சேலத்து மாரியம்மன், ஓம்சக்தி மாரியம்மன், எல்லம்மன், பட்டாளம்மன், கங்கையம்மன் கோவில் திருவிழா, நேற்று முன்தினம் துவங்கியது. விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம், ஆராதனை நடந்தது. கடந்த வாரம் காப்பு கட்டி அம்மனுக்கு விரதம் இருந்த பக்தர்கள், நேற்று முன்தினம் இரவு அக்னி குண்டம் இறங்கினர். தொடர்ந்து நேற்று காலை, அந்தந்த மாரியம்மன் கோவில்களில் இருந்து, வாய் மற்றும் முதுகில் அலகு குத்திய பக்தர்கள், கிரேனில் தொங்கியபடி ஊர்வலமாக சென்றனர். பக்தர்கள் சிலர் முதுகில் அலகு குத்தி, அதில் கயிற்றை கட்டி, லாரி, கார், டெம்போ, ஆட்டோ ஆகியவற்றை இழுத்து சென்றனர். இறுதியில் மந்தைவெளி மாரியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தி, விரதத்தை முடித்தனர். பின் ஆடு, கோழிகளை பலி கொடுத்து பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி, நேற்று தேன்கனிக்கோட்டை நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. நகர் முழுவதும் மாவிலை மற்றும் வேப்பிலை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. தேன்கனிக்கோட்டை போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar