நபிகள் நாயகம் தன்னிடம் இறைவன் எடுத்து வைத்த கட்டளைகளை மனித சமுதாயத்துக்கு சொல்கிறார். *பெற்றோருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். * வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். *மானக்கேடான செயல்களின் அருகில் கூட செல்லாதீர்கள். அவை வெளிப்படையாக இருந்தாலும் மறைவானவையாக இருந்தாலும் சரியே. *இறைவன் கண்ணியத்திற்குரியதாக்கிய எவ்வுயிரையும் நியாயமின்றிக் கொலை செய்யாதீர்கள். *அனாதைகளின் செல்வத்தை அவர்கள் பருவ வயதை அடையும் வரை, நியாயமான முறையில் அன்றி நெருங்காதீர்கள். (அவர்கள் பொருளில் கைவைத்து விடக்கூடாது) *அளவையிலும் நிறுவையிலும் நீதியைக் கடைபிடியுங்கள்.