கூடலுார் : கூடலுாரில், இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாவட்ட குழு கூட்டம் நடந்தது. கட்சியின் நிறுவன தலைவர் ஸ்ரீதரன் தலைமை வகித்து பேசுகையில்,நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கூடலுார், குன்னுார், கோத்தகிரி பகுதிகளில், 208 விநாயகர் சிலைகள் வைக்கப்படும்,என்றார் கூட்டத்தில், தமிழக தலைவர் ராஜேந்திரன், கேரள மாநில தலைவர் பக்தவசலம், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் சசி, கேரளா மகளிர் அணி தலைவர் ராதா, மாநில பொது செயலர் சுரேஷ்ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.