எல்லைகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா: பக்தர்கள் நேர்த்திகடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2017 10:08
மயிலாடுதுறை: பழமை வாய்ந்த எல்லைகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குழி இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த எல்லைகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மா தம் கடைசி புதன் அன்று தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு தீமிதி திருவிழா கடந்த மாதம் 31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 ம் நா ளான நேற்று அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மாலை நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 200க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தீக்குழியில் இறங் கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். தொடர்ந்து அம்பாளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு எல்லைகாளியம்மனை வழிபட்டனர்.