சேர்ந்தமரம் : வீரசிகாமணி கருப்பசாமி கோயிலில் கொடை விழா நடந்தது. சேர்ந்தமரம் அருகேயுள்ள வீரசிகாமணி இந்து யோகீஸ்வரர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கருப்பசாமி கோயில் கொடை விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து குற்றாலம் புனித தீர்த்தம் எடுத்து வருதல், நையாண்டி மேளம், கரகாட்டம், வாணவேடிக்கையுடன் சிறப்பு பூஜை, சாம பூஜை ஆகியன நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.