பதிவு செய்த நாள்
21
ஆக
2017
01:08
சேலம்: ராஜகணபதி கோவிலில், வரும், 25ல் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்குகிறது. சேலம், ராஜகணபதி கோவிலில், வரும், 25 காலை, 4:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்குகிறது. மாலை, 4:00 மணிக்கு தங்க கவசம் சாத்துபடி நடக்கிறது. 26 மாலை, 4:00 மணிக்கு வல்லபகணபதி அலங்காரம் சாத்துபடி, 27ல் குமாரகணபதி அலங்காரம், 28, 29, 30, 31ல் சிறப்பு அலங்காரம், செப்., 1ல் லெட்சுமி கணபதி அலங்காரம், 2ல் முத்தங்கி அலங்காரம், 3ல் சித்தி புத்தி கணபதி அலங்காரம் செய்யப்படுகிறது. அன்று இரவு, 12:00 மணிக்கு சத்தாபரணம், 4ல் மலர் அலங்காரம் நடக்கிறது. 5 அதிகாலை, 7:00 முதல், 10:00 மணி வரை மஞ்சள் நீராட்டம், வசந்த உற்சவம், 1,008 லிட்டர் பால் அபி?ஷகம், அன்னதானம் நடக்கிறது. விழா தொடங்கியது முதல், முடியும் வரை, தினமும் காலை, 9:00 முதல், 12:00 மணி வரை சிறப்பு அபி ?ஷகம், ஆராதனை நடக்கிறது.