Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழமை வாய்ந்த பழனியப்பர் கோவில் ரூ. 15 ... பழநி சண்முகநதிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரிய மாரியம்மன் கோவிலுக்கு கேரளா பாணி மேற்கூரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2017
12:08

ஈரோடு: பெரிய மாரியம்மன் கோவிலுக்கு, கேரளா பாணியில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இடப்பற்றாக்குறை மற்றும் கோவில் நிலம் தொடர்பான வழக்கு நடப்பதால், ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலுக்கு, கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்த முடியவில்லை. இந்நிலையில், 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மேற்கூரை சேதமடைந்து, அதை தாங்கி நின்ற மரக்கட்டைகளும் உடைந்தன. இவற்றை அகற்றி விட்டு, தனியார் பங்களிப்புடன், 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணி, கடந்த ஜூலை முதல் வாரம் தொடங்கியது. முதல் கட்டமாக தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, இரண்டு போர்வெல் போடப்பட்டது. பின் படிப்படியாக, பழைய மேற்கூரை ஆஸ்பெட்டாஸ் சீட்டுகள் அகற்றப்பட்டன. கேரளா மாடலில் மேற்கூரை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பிரத்யேகமாக இரும்பு தளவாடம் தயாரித்து, மேற்கூரை பிரேம் அமைக்கப்பட்டது. ஓடுகள் பொருத்தும் பணி, 10 நாட்களாக நடந்தது. நேற்று பணி நிறைவடைந்தது. இனி சுற்றுச்சுவர் கட்டும் பணி, தரைத்தளம் உயர்த்தும் பணி முடிந்தால், 100 சதவீதம் நிறைவடையும். திருப்பணி நடப்பதால், பக்தர்கள் வருகை குறைந்துள்ளது. விரைந்து பணிகளை முடிக்க, கோரிக்கை எழுந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar