வெட்கம், ஒழுக்கம் ஆகியவை மனிதனுக்கு அவசியமானவை. மனித குலம் தோன்றியதில் இருந்தே சில உறுப்புகளை மறைத்து வந்துள்ளனர். ஆனால் சிலர் அரைகுறை ஆடையுடன் உலா வருகின்றனர். ஆண்கள் முழங்காலில் இருந்து தொப்புள் வரையுள்ள பாகத்தை மூட வேண்டும். பெண்கள் முகம், உள்ளங்கை தவிர மற்ற பகுதிகளை மறைக்க வேண்டும்.
கணவனை தவிர யாருக்கும் தன் அழகை வெளிப்படுத்தக்கூடாது. பெண் வயதுக்கு வந்த காலத்தில் இருந்து தன் அழகை இழக்கும் வரை இதை கடைபிடிக்க வேண்டும். குர்ஆனில், அல்லாஹ் நபிகள் நாயகத்திடம் கூறும் ஒரு வசனத்தை கேளுங்கள். “நபியே! உம்முடைய மனைவிகள், உம்முடைய புதல்விகள் மற்றும் நம்பிக்கையாளர்களின் மனைவியர் ஆகியோரிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய துப்பட்டிகளின் முந்தானையைத் தங்களின் மீது தொங்க விட்டு கொள்ளட்டும். அவர்களை அறிந்து கொள்வதற்கும், அவர்கள் தொல்லைக்கு ஆளாகாமல் இருப்பதற்கும் இதுவே மிகவும் ஏற்ற முறையாகும். இறையறிவு ஊட்டுவோம் இறைநெறி பற்றிய அறிவு இல்லாதவர்களுக்கு அதை ஊட்ட வேண்டும் என்பது நாயகத்தின் கருத்து. இது பற்றி அவர் கூறும்போது, சிலர் தம் அண்டை வீட்டாரிடமிருந்து இறைநெறி பற்றிய அறிவை பெறுவதில்லை. இறைநெறி குறித்து அறிந்திருப்பதால் ஏற்படும் விளைவுகளையும் அறிந்து கொள்வதில்லை. மக்கள் தம் அண்டை வீட்டாருக்கு அவசியம் இறைநெறியை கற்றுத்தர வேண்டும். இறைநெறியின் ஆழ்ந்த கருத்துக்களை அவர்களிடம் உருவாக்க வேண்டும். அவர்களுக்கு நல்லுபதேசம் செய்ய வேண்டும். நல்ல விஷயங்களை அறிவுறுத்த வேண்டும். தீயவற்றில் இருந்து அவர்களை தடுக்க வேண்டும், என்றார்.