அன்னதானம் செய்வதாக இருந்தால், அது குறித்த அறிவிப்பில், இடம், நேரம், காரணம் மட்டும் இருந்தால் போதுமானது. தனி நபர்களின் பெயர் தேவையில்லை. பைபிளில், நீயோ தர்மம் செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக் கடவது, என்ற வசனம் இருக்கிறது. இதைக் கடைபிடிப்பவரின் தர்மமே கடவுளால் ஏற்றுக் கொள்ளப்படும். சூரியன் ஒளி தருகிறது. மரங்கள் ருசியான கனி தருகிறது. பூக்கள் மணம் பரப்புகின்றன. உப்பு உணவுக்கு ருசி தருகிறது. மெழுகுவர்த்தி ஒளி வழங்குகிறது. இவையெல்லாம் தங்களை தியாகம் செய்து மக்களுக்கு உதவுகின்றன. தங்கள் சேவை பற்றி பெருமைபட்டுக் கொள்வதில்லை. இவற்றையெல்லாம், கடவுள் படைத்ததற்கு காரணமே, ஆரவாரமின்றி தர்மம் செய்ய வேண்டும் என்பதை மனிதன் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.