பதிவு செய்த நாள்
05
செப்
2017
03:09
அன்னுார்: ஒட்டர்பாளையம், செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஒட்டர்பாளையம், செல்வ விநாயகர் கோவிலில், புதிதாக விமான கோபுரம், சுற்றுப்பிரகாரம், முன் மண்டபம், சுற்றுச்சுவர் என அனைத்து திருப்பணிகளும் செய்யப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேக விழா, கடந்த 3ம் தேதி விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. நேற்று அதிகாலையில் யாக சாலையிலிருந்து, புனித நீர் அடங்கிய குடங்கள் கோவில் கோபுரத்தை அடைந்தன. காலை 7:45 மணிக்கு விமான கோபுரம், செல்வ விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தச தானம், மகா அபிஷேகம், அன்னதானம் ஆகியவை நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.