பதிவு செய்த நாள்
05
செப்
2017
02:09
செஞ்சி: செஞ்சி கோதண்டராமர் கோவிலில் எட்டு நாள் நாலாயிர திவ்விய பிரபந்த பாசுரம் படிக்கும் நிகழ்ச்சி துவங்கியது. செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் பாகவதர் குழுவினர்கள் 4ம் தேதி துவங்கி 11ம் தேதி வரை, நாலாயிர திவ்விய பிரபந்த பாசுரம் படிக்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது. இதை முன்னிட்டு கோதண்டராமருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இராஜா தேசிங்கு கல்வி அறக்கட்டளை சேர்மன் செஞ்சி பாபு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ராமமூர்த்தி திருமால் துதிபாடினார். டாக்டர் ரமேஷ்பாபு, கோதண்டராமர் அறக்கட்டளை நிர்வாகி பாரதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சபை தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். விழா குழுவினர் எட்டியாப்பிள்ளை, சுந்தரம், சாமிக்கண்ணு, பெருமாள், அருணகிரி, அப்புபிள்ளை, ராமமூர்த்தி, கிருஷ்ணவேணி, குமார், ஜனார்த்தனன், புருஷேகத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பாகவதர்கள், ஆண்டாள் கோஷ்டியினர் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை படித்தனர்.