பதிவு செய்த நாள்
06
செப்
2017
12:09
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், புருஷோத்தம பெருமாள் கோவில், எட்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. குமாரபாளையம் அருகே, தட்டான்குட்டை ஊராட்சி, ஜெய்ஹிந்த் நகரில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத புருஷோத்தம பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, எட்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கடந்த, 3ல் காவிரி ஆற்றிலிருந்து, தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. நேற்று முன்தினம், திவ்யபிரபந்தம், அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, மஞ்சள் கொம்பு, குங்குமம் உள்ளிட்ட பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர்.