Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கல்வி வளம் பெற ஹயக்ரீவரை வழிபடுங்க! அனுபவிக்கும் பெருமாள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2017
05:09

செப்.17 ல் புரட்டாசி மாதம் பிறப்பதை ஒட்டி திருப்பதி வெங்கடேசர் குறித்த தகவல்கள் இங்கு இடம் பெற்றுள்ளது.இரட்டிப்பு பலன் கிடைக்கணுமா திருப்பதி ஏழுமலையானுக்கு கோயில் கட்டிய மன்னர் தொண்டைமான் சக்கரவர்த்தி. இவர் தினமும் பெருமாளை தங்க தாமரை மலர்களால் வழிபட்டு வந்தார். ஒருநாள் பெருமாள் முன், மண் மலர்கள் சிதறிக் கிடக்க கண்டார். இதற்கு காரணமானவர் யார் என்பதை பெருமாளிடம் கேட்டார். பீமன் என்னும் குயவனே இதற்கு காரணம். சனிக்கிழமை விரதமிருக்கும் அவன், தினமும் பணியைத் தொடங்கும் முன்,  மண் மலர்களால் எனக்கு அர்ச்சனை செய்வான்.  அவனுடைய பக்தியை உலகறியச் செய்ய இந்த மண் மலர்களையும்  ஏற்று அருள்புரிந்தேன் என அசரீரி கேட்டது.  பணத்தை விட பக்தியே அவசியம் என்பதை இந்த சம்பவம் மூலம் ஏழுமலையான் உணர்த்தினார். இந்தபுரட்டாசி சனி நாளில் விரதமிருந்து திருப்பதி பெருமாளை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

வெற்றி கொண்டாட்டம் தனது ஆட்சிக்காலத்தில், ஏழுமலையானை தரிசிக்க ஏழு முறை வந்தவர் விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர். விஜய நகர ஆட்சியில் கி.பி.1509 முதல் 1529 வரை 20 ஆண்டுகள் ஆட்சி  செய்தவர் இவர். ஒவ்வொரு முறையும் ஏராளமான தங்கம், நவரத்தினம், ஆபரணம் என காணிக்கை செலுத்தினார். உதயகிரி கோட்டையை கைப்பற்றிய போது,  வெற்றியை கொண்டாடும் விதத்தில் ஏழுமலையானுக்கு 30,000 பவுன்களால் கனக அபிஷேகம்  செய்து நன்றி தெரிவித்தார்.

பாட்டால் நன்றி சொன்னவர் ஆந்திராவில் கடப்பா மாவட்டத்திலுள்ள தளபாகம்
என்னும் கிராமத்தில் 600 ஆண்டுக்கு முன் வாழ்ந்தவர் அன்னமாச்சாரியார். இவர் பசியால் வாடிய போது, பத்மாவதி தாயாரே நேரில் காட்சியளித்து உணவளித்தார்.  அதற்கு நன்றிக்கடனாக  தன் 16வது வயது முதல் 80 வயது வரை திருப்பதி ஏழுமலையான் முன்னிலையில் 32 ஆயிரம் பாடல்களை பாடி மக்களிடையே பக்தியை பரப்பினார். தெலுங்கில் உள்ள இவரது பாடல்கள் செப்பு தகட்டில் பொறிக்கப்பட்டு கோயிலில் பாதுகாக்கப்படுகிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* சிவபெருமான் தன் இடப்பாகத்தை பார்வதிக்கு அளித்த தலம் திருவண்ணாமலை.  * கார்த்திகை தீபத்தன்று ... மேலும்
 

சூரியனை சுட்டவர் டிசம்பர் 03,2025

திருவண்ணாமலையை வலம் வருவது குறித்து தேவர்கள் பெருமையாகப் பேசினர். ஆனால் சூரியபகவான் ... மேலும்
 

சிவனும் முருகனே டிசம்பர் 03,2025

யாராலும் அணுக முடியாத மலை அண்ணாமலை. தேவர்களாலும் அறிய முடியாத பரம்பொருள் சிவபெருமான். ஆனால் பக்தர்கள் ... மேலும்
 
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கம்பத்து இளையனார் சன்னதிக்குத் தெற்கே சிவகங்கை தீர்த்தம், ... மேலும்
 
அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் திருவிழாவும், பங்குனி உத்திரத் திருவிழாவும் ராஜேந்திரச்சோழன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar