பதிவு செய்த நாள்
15
செப்
2017
10:09
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் கோயிலில், முக்கிய நைவேத்தியங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
படி அளக்கும் அன்னை பட்டினி கிடப்பதாக பக்தர்கள் குமுறுகின்றனர்.
ஆண்டாள் அவதரித்து பெருமாளுக்கு பாமாலையும் பூமாலையும் சூடிக்கொடுத்த பெருமையுடைய தலம் ஸ்ரீவில்லிபுத்தூர். குளிர்விக்கும் நைவேத்தியங்கள்ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலத்தில் இருந்து கிடைக்கும் வருவாயை கொண்டு காலை 6:00 மணிக்கு விஸ்வரூபம். காலை 8:30 மணி காலசந்தி. மதியம் 12:00 மணி உச்சி க்காலம். மாலை 6:00 மணி சாயரட்சை. இரவு 8:00 மணி அத்தாளம். இரவு 9:00 மணி அரவணை என தினமும் ஆறு கால பூஜைகள். வடபத்ர சயனர் சன்னதியில் காலை 7:00 மணி விஸ்வ ரூபம். காலை 9:00 மணி காலசந்தி. மதியம் 12:00 மணி உச்சிக்காலம். மாலை 6:00 மணி சாயரட்சை. இரவு 8:00 மணி அத்தாளம். இரவு 8:30 மணி அரவணை என தினமும் ஆறு கால
பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் வேளாண்மை செழித்து
ஓங்கும் என்பது ஐதீகம்.
அரசியலும் ஆண்டாள் கோயிலும் கோயில் நிலங்களை அரசியல் கட்சியினர் அபகரி க்கத்துக்கொண்டு வருவாயை வழங்குவது இல்லை. இதனால் பூஜைக்கான செலவுகளை ஈடுகட்ட தனியார் பங்களிப்பை நிர்வாகம் நாடியது. சிறப்பு தரிசனம், கட்டண தரிசனம் என நிர்ணயித்து கிடைக்கும் வருவாயில் நைவேத்தியம், பராமரிப்பு செலவுகளை சரி செய்தனர்.
கோயில் நிலங்களை மீட்கவும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரிக்கவும்
அறநிலையத்துறை எள் முனையளவு கூட முயற்சிக்கவில்லை. பல கோடி ஊழல்
அறநிலையத்துறை கோயில்களின் வருவாயை கணக்கிட்டு மூன்று பிரிவுகளாக்கினர்.
ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவான வருவாய் உள்ள கோயில்கள் தரம் ஒன்று.
2 லட்சம் ரூபாய்க்கு மேல் 10 லட்சம் ரூபாய்க்குள் தரம் இரண்டு.
10 லட்சம் ரூபாய்க்கு மேல் தரம் மூன்று என பிரிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் தரக் கோயில்களுக்கு அறநிலையத்துறை நிதி வழங்காது. அனைத்து செலவுகளும் கோயில்
வருவாய் மூலம் நிவர்த்தி செய்யப்படுகிறது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோயில்கள் வந்த பின் கோயில்களின் நில வருவாய், முடங்கியது. நன்கொடைகளில் பல கோடி ரூபாய் ஊழல் நடக்கிறது.
படி அளக்கும் ஆண்டாள் பட்டினி கோயிலில் தினசரி நடக்க வேண்டிய அத்தாளம் இரவு
8:00 மணி பூஜை நடக்கவில்லை. தினமும் ஆறுகால பூஜைக்கு, நித்ய ஆராதனை கட்டணமாக பக்தர்கள் ரூ.5000 வீதம் செலுத்துகின்றனர்.
இதில் ஆறு வேளை பூஜைக்கு 36 படி (54கி) அரிசி பிரசாதம் அம்மனுக்கு நைவேத்தியம்
செய்ய வேண்டும். ஒரு வேளைக்கு 9 கி., அரிசி பிரசாதம் படையல் செய்ய வேண்டும்.
அத்தாளம் பூஜை 1990 முதல் நிறுத்தப்பட்டுள்ளதால், இத்தனை ஆண்டுகளாக அத்தொகை எங்கே போயிற்று எனத்தெரியவில்லை. மீதி உள்ள ஐந்து வேளையும் ஒரே பிரசாதம் தான் படையல் செய்வதாக புகாரும் உள்ளது.
உச்சிகால பூஜையில் முன்பு வழங்கும் சாப்பாடு தற்போது நிறுத்தப்பட்டது. இப்படி படி
அளக்கும் அன்னை பசித்திருக்கிறாள். நித்திய ஆராதனை கட்டணம் ஒரு கோடி ரூபாய்,
வங்கியில் உள்ளது. நைவேத்தியங்கள் தடையின்றி நடக்க தேவையான வருவாய் ஆதார ங்கள் இருக்கிறது.
அதை வைத்து முறையாக பூஜை, நைவேத்தியம் நடக்காதது பக்தர்களுக்கு வருத்தம்
தருகிறது. நன்கொடை மூலம் நடக்கும் அன்னதானம் 100 பக்தர்க்கு மட்டுமே வழங்க ப்படுகிறது. கோயில் நிதியில் இருந்து அதிக பக்தர்களுக்கு வழங்கலாம்.செயல் அலுவலர் சா.ராமராஜா கூறியதாவது: 1975ல் பஞ்சம் ஏற்பட்டது.
நைவேத்தியத்திற்கு அரிசி கூட விலைக்கு வாங்கும் நிலை. இதனால் நைவேத்தியம் முழுமையாக நடக்கவில்லை. தற்போது உப கோயில்களான வடபத்ர சயனர், பெரியாழ்வார், கிருஷ்ணன், திருவண்ணாமலை ஸ்ரீநிவாசன், ஸ்ரீரெங்கர், ஸ்ரீகாட்டழகர் கோயில்களில் தினமும் 30 படி அரிசி மூலம் நைவேத்தியம் செய்வித்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. உச்சிக்கால பூஜைக்கு பின் அன்னதானம், நித்திய ஆராதனை கட்டணம் மூலம் கிடைக்கும் வட்டி தொகையில் பூஜைகள், பிரசாதங்கள் வழங்கப்படுகிறது. அத்தாள பூஜை ஏற்பாடுகள் நடக்கின்றன, என்றார்.