Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

அறநிலைய கமிஷனரிடம் கோவில் பூசாரிகள் ... மேல்மலையனூரில் ஊஞ்சல் ஊற்சவம்: குவிந்த பக்தர்கள் மேல்மலையனூரில் ஊஞ்சல் ஊற்சவம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாடலீஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2017
01:09

கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு கால பைரவருக்கு நடந்த சிறப்பு பூஜையை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  மறைந்த முன்னோர்களுக்கு ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்று விரதமிருந்து திதி கொடுப்பது வழக்கம். அவ்வாறு மாத அமாவாசையில் திதி கொடுக்க தவறியவர்கள் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை அன்று நீர் நிலைகளில் நீராடி, அந்தணர்களைக் கொண்டு திதி கொடுத்தால் 12 மாதத்திற்கு திதி கொடுத்தன் பலன் பெறலாம்.

நேற்று மகாளய அமாவாசையையொட்டி கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச், பெண்ணையாறு, திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் சிவகரதீர்த்த குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.  சிறப்பு பூஜை: மகாளய அமாவாசை முன்னிட்டு திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதனையொட்டி சங்கு மண்டபத்தில் புனித நீர் கலசங்கள் பிரதிஷ்டை செய்து, 96 வகை மூலிகை பொருட்களை கொண்டு வேத, மூல மற்றும் மால மந்திரங்களுடன் ேஹாமம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும், சந்தனக்காப்பு அலங்காரமும் நடந்தது. இரவு கால பைரவருக்கு சகஸ்கரநாம பூஜை நடைபெற்றது. சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்த குளக்கரையில், ஏராளமானோர் காலை முதல் தர்ப்பணம் கொடுத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் நடராஜரை தரிசனம் செய்தனர். மகாளய அம்மாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் சிவகங்கை தீர்த்தக் குளத்தில் குவிந்ததால் நடராஜர் கோவிலில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் ... மேலும்
 
temple news
மீஞ்சூர்: மீஞ்சூர் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, தேர் திருவிழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar