முகவ்திஸ் என்ற எகிப்திய மன்னர், மதினாவிற்கு ஒரு மருத்துவரை அனுப்பி வைத்தார். அவர் மதினா வந்து சில மாதங்கள் ஆகியும், அவரிடம் ஒருவர் கூட வைத்தியம் பார்க்கவில்லை. தான் ஒரு அன்னியர் என்பதால், யாரும் வைத்தியம் பார்க்க வரவில்லையோ என்று வேதனைப்பட்டார். நாயகம் அந்த மருத்துவரைப் புன்முறுவல் பூத்தபடி, “நீங்கள் உங்கள் நாட்டிற்கு திரும்பி செல்லுங்கள். அல்லாஹ்வின் அருளால் உங்கள் உதவி எங்களுக்குத் தேவைப்படவில்லை. ஏனெனில் திருக்குர்ஆனின் போதனைப்படி நாங்கள் பசித்த பின்னரே உண்போம். அதுவும் குறைத்தே உண்போம். ஆகவே நோய் எங்களிடம் அதிகம் அண்டுவதில்லை, என்றார்.தன்னை நினைத்து நொந்த மருத்துவரிடம் நாயகம் இனிமையாக பேசியதால் அவர் மகிழ்ந்தார். பார்த்தீர்களா! அன்பான வார்த்தைகள் எல்லாரையும் மகிழ்ச்சிப் படுத்தும் என்பதை!. நீங்களும் பேச்சில் அன்பை நிறையுங்கள். அனைத்து இதயங்களையும் உங்கள் பக்கம் திருப்புங்கள்.