கரூர்: மஹாபரணியின், 56வது குரு பூஜை ஆராதனை விழா, கரூர் சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் திருக்கோவிலில் நடந்தது. நேற்று அதிகாலை, 4:30 மணி முதல், 6:00 மணி வரை மந்திர ஹோமம், சுதர்சன ஹோமங்கள் நடந்தன. 8:00 மணிக்கு சேவல் கொடியை, தாசில்தார் சக்திவேல் ஏற்றினார். தொடர்ந்து, 108 தீர்த்தங்கள் அடங்கிய மஹா அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது. பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.