மீனாட்சி கோயிலை சுற்றியுள்ள உயரமான கட்டடங்கள் அகற்ற ஏற்பாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2011 12:12
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றிலும் 9 மீட்டருக்கு மேல் உயரம் உள்ள கட்டடங்கள் அகற்றப்படும், என கலெக்டர் சகாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது அறிவிப்பு: மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றிலும் 1 கி.மீ., தொலைவிற்குள் 9 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட கட்டுமானங்கள் அமையக்கூடாது என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்குத்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, 9 மீட்டருக்கு மேல் உயரமாக உள்ள கட்டடங்களை கணக்கிடும் பணி 70 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணி விரைவில் முடிக்கப்பட்டு, விதிமீறிய கட்டடங்களை மாநகராட்சி மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கை விடுத்துள்ளார்.