பெரியாறு அணை பிரச்னை எதிரொலி ஏர்வாடிக்கு யாத்ரீகர்கள் வருகை குறைந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2011 12:12
கீழக்கரை : முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையால், ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவிற்கு வரும் கேரள யாத்ரீகர்களின் வருகை குறைந்தது.ஏர்வாடியில் பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. இங்கு, கேரளாவை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர். தற்போது, முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக தமிழக-கேரளா எல்லை பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது. கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வாகனங்கள் வர முடியவில்லை. இதனால்,கேரள யாத்ரீகர்களின் வருகை குறைந்து, ஏர்வாடி தர்கா வெறிச்சோடி காணப்படுகிறது. ஓட்டல் மற்றும் கடைகளில் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. தர்கா ஹக்தார் சிராஜ்தீன் கூறியதாவது: அணை பிரச்னையால் யாத்ரீகர்களின் வருகை கணிசமாக குறைந்துள்ளது. இருப்பினும், ரயில் மூலமாக யாத்ரீகர்களின் வந்து செல்கின்றனர், என்றார்.