பதிவு செய்த நாள்
21
அக்
2017
11:10
மயிலம்: மயிலம் முருகன் கோவில் கந்த சஷ்டி விழா நேற்று துவங்கியது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா, நேற்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. காலை 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து 11:00 மணிக்கு, கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு பால், சந்தன அபிஷேகம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு, மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், வரும் 25ம் தேதி இரவு நடக்கிறது. விழா ஏற்பாடுகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் மேற்பார்வையில் செய்யப்பட்டு வருகிறது.