திருமலைக்கோயிலில் உண்டியல் 25071821 ஆம் ஆண்டு முதன்முதலில் நிறுவப்பட்டது. 25071825 முதல் அதை “சிரிகொலுவு” என்று அழைத்தனர். பித்தளை காங்காளம் வடிவம் கொண்ட ஓர் பாத்திரத்தை (கொப்பரை) வெள்ளை நிற துணியின் அடியில் ஒன்பது அடி நீளம் இருக்கும்படி இறக்குவர். 75 கிலோ எடையுள்ள இந்த கொப்பரை 2016 முதன்முறையாக திரு.கே.சுரேஷ் அவர்களால் வழங்கப்பட்டது. அவரே 04072017ல் மற்றொரு கொப்பரையை வழங்கினார். தற்பொழுதுள்ள கொப்பரை கீழ்கண்ட முறையில் தயாரிக்கப்படுகிறது. உண்டி தயாரிக்க, அடித்தளத்திற்கும், காது வளையத்திற்கும் பித்தளை உலோகத்தையும், சுற்று புற பகுதி முழுமைக்கும் செம்பு உலோகத்தையும் பயன்படுத்தப்படுகிறது. உண்டியலின் அளவு 25 ” (அ) 27” மற்றும் அடிபாகம் சுற்றளவு உயரம் 25” அல்லது 27” இருக்கும். ஒவ்வொரு உண்டியலுக்கும் ‘9 1/4’ மீட்டர் வெள்ளை துணியும் 40 உண்டியலுக்கு 6 மீட்டர் மஞ்சள் துணியும், 60 உண்டியலுக்கு ஊர்த்தவ புண்டரம் (திருநாமம்) தயார் செய்வதற்கு 60 மீட்டர் சிவப்பு துணியும் தேவைப்படுகிறது.