எம்பெருமான் திருவேங்கடமுடையான் அலங்காரப்பிரியன். மலர்கள் எனில் அவனுக்கு கொள்ளை விருப்பம். இதனால் தான் இத்திருமலை புஷ்ப மண்டபம் எனப்படுகின்றது. இங்கு மலர் கைங்கர்யம் செய்து வந்தவர் அனந்தாழ்வான். இவர் பகவத் இராமாநுஜரின் முதன்மைச் சீடர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.