முயற்சி இல்லாமல் வெற்றி இல்லை:சுவாமி சிவயோனந்தா பேச்சு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2017 12:10
மதுரை;மதுரை சின்மயா மிஷனில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான சுயமேம்பாட்டு ஆளுமை பயிற்சி முகாம் நடந்தது.முகாமை போலீஸ் உதவி கமிஷனர் மணிவண்ணன் துவக்கி வைத்தார்.சுவாமி சிவயோகானந்தா, சுவாமி ஜிதேஷ் சைதன்யா பேசியதாவது: இன்றைய மாணவர்களிடம் ஆற்றல், திறமை அதிகம் உள்ளது. அதை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்க வேண்டும். அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். நம்மிடம் பொழுது போக்கிற்காக பழகுவோர் நமக்கு வழிகாட்டியாக இருக்கமாட்டார்கள் என்று உணர வேண்டும். முயற்சி செய்யாமல் வெற்றி கிடைக்காது, அதே போல் முயற்சி செய்பவர்கள் எல்லாம் வெற்றி பெறுவது இல்லை. எனவே, திட்டமிட்டு நாம் முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும். தோல்விகள் கூட நல்ல அனுபவங்களை தரும் என்பதை மாணவர்கள் புரிந்து கொண்டு, தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும், என்றார்.கிளை மேலாளர் வெங்கடாச்சலம், மதுரை நார்த் வெஸ்ட் ரோட்டரி சங்க தலைவர் மனோகரன், மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சின்மய யுவகேந்திரா குழுவினர் செய்திருந்தனர்.