செந்தூர் முருகன் கோயில் கருவறை முன்பு இந்திர மயில், சூர மயில் என இரு மயில்கள் உள்ளன. முருகன் குழந்தையாக இருந்தபோது, இந்திரனால் வழங்கப்பட்டது இந்திர மயில். சூரசம்ஹாரத்தின்போது சூரனின் உடலின் ஒரு பகுதியை மயிலாக மாற்றியது அசுர மயில், இதேபோல், இக்கோயிலில் தங்க, செப்புக் கொடி மரங்கள் இரண்டு உள்ளன.