அகத்திய மாமுனி அரூபமாக வாழ்ந்துவரும் தென்பொதிகை மலை பல அரிய சிறப்புகளைக் கொண்டது. இம்மலையில் சந்தன மழையைப் பொழியும் மரங்கள், மகிழவர்த்தினி என்று அழைக்கப்படுகின்றன. இம்மர மலர்களின் மகரந்தம் பனிச்சாரலில் கலந்து, மலையெங்கும் தூவப்படுவது, சந்தனச் சாரல் எனப்படுகிறது. மலை மீது கல்யாணத் தீர்த்தக்கரையில் உள்ள சிவன் கோயிலைச் சுற்றி பன்னீர் மழை பொழிவதாகக் கூறுகின்றனர். அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு நாட்களில் இங்கு தேவர்கள் வந்து இறைவனை வழிபடும்போது, பன்னீர் மழை பொழிவதாகவும் கூறுகின்றனர். இந்நாட்களில் மக்கள் இங்கு தங்கி வழிபாடு செய்கின்றனர்.