● வெளியுலகத்திற்கு தெரியாது என எண்ணி யாருக்கும் துரோகம் செய்யாதே. மனசாட்சிக்கு மதிப்பு கொடு. வாழ்வில் நிம்மதி காண்பாய். ● தாயை நம்பும் குழந்தை போல, மனம் ஒன்றி கடவுளை வழிபட்டால் அவரை நேரில் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும். ● கீழான ஆசைகள் மனதில் எழுவதை எண்ணி வருந்த வேண்டாம். கடவுளைச் சரணடைய பலவீனமான எண்ணத்தில் இருந்து விடுபட வேண்டும். ● படகு தண்ணீரில் இருக்கலாம். ஆனால் தண்ணீர் படகில் இருக்க கூடாது. அது போல உலகில் வாழ்ந்தாலும், ஆசைகள் மனதிற்குள் நுழையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ● வீட்டில் குடியிருப்பவன் விழிப்பாக இருந்தால், திருடன் நுழைய முடியாது. அதுபோல புத்தி தெளிவுடன் இருந்தால், மனதிற்குள் தீய எண்ணம் நுழைய முடியாது. ● கோபத்தில் அறிவு, தன்னை திரையிட்டு மறைத்துக் கொள்வதால் நல்லது, கெட்டதை பகுத்தறியும் திறன் இல்லாமல் போகும். சொல்கிறார் ராமகிருஷ்ணர்