கம்பம்: கம்பம் காமுகுல ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கத்தின் சார்பில் ,பகவதியம்மன் கோயில் திருவிழா நேற்று துவங்கியது.
சமுதாய நாட்டாண்மை காந்தவன் தலைமை வகித்தார். ஒக்கலிக சங்க செயலாளர் முருகா னந்தம் முன்னிலை வகித்தார். நீதிபதி ராம.பார்த்திபன் துவக்கி
வைத்தார். முன்னதாக மாண வர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ,
ஆரோக்ய சமையல் போட்டிகள் நடத்தப்ப ட்டது. ஒக்கலிக சமுதாய மக்கள் மன்றத்தில்
நடந்த போட்டிகளில் ஏராளமானோர் பங்கேற் றனர். தொடர்ந்து அம்மன் அழைப்பு,
மாவிளக்குநடந்தது. இன்று காலை திருவிழாவை முன் னிட்டு இரட்டை மாட்டுவண்டி
போட்டி நடக்கிறது.
கம்பமெட்டுரோட்டில் நடைபெறும் இப்போட்டியில்
வெற்றிபெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. தொடர்ந்து முளைப்பாரி
ஊர்வலம்,வண்டிவேட ஊர்வலம் நடைபெறும். நிறைவு நிகழ்ச்சியாக அம்மன் பூஞ்சோலை
நடக்கிறது.