காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் வருஷாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07நவ 2017 11:11
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடை பெற்று ஓராண்டு நிறைவு பெற்றதை தொடர்ந்து முதலாமாண்டு வருஷாபிஷேக நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று முதற்கால யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 108 கலச யாகசாலை முன்பு அமைக்கப்பட்டது. நேற்று காலை 7:15 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, 10:05 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை, 10:15 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், 12:15 மணிக்கு தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து அன்னதானம் நடந்தது.
சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு வாண வேடிக்கை யுடன் அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்தார். நிகழ்ச்சியில் இணை ஆணையர் ஆர்.செந்தில்வேலன், உதவி ஆணையர் ராமசாமி, செயல் அலுவலர் அகிலாண்டேஸ்வர், கணக்கர் அழகு பாண்டி, லலித முத்துமாரியம்மன் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பலர் பங்கேற்றனர். பிச்சை குருக்கள் தலைமையில் ரவிசாமி மற்றும் சிவாச்சாரியார்கள் யாக சாலை பூஜையை நடத்தினர்.