Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குலுக்கல் முறையில் பூஜாரி தேர்வு சபரிமலையில் பூஜை செய்யும் தாழமண் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வர்ணிக்க வார்த்தை இல்லை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2017
04:11

சபரிமலை மேல்சாந்தி பரவசம் சபரிமலையில் ஓராண்டு தங்கிய அனுபவத்தை வர்ணிக்க வார்த்தை இல்லை. இங்கிருந்து செல்ல வேண்டும் என நினைக்கும் போது மனதில் பாரமாக உள்ளது, என்கிறார் பணி நிறைவு பெறும் மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி. சபரிமலையில், ஆண்டுக்கு ஒருமுறை  மேல்சாந்தி நியமிக்கப்படுவார்.  கார்த்திகை முதல்நாளில் பொறுப்புஏற்கும் இவர் சபரிமலையில் ஒரு வருடம் தங்க வேண்டும். குடும்ப உறுப்பினர் மறைந்தாலும் போகக்கூடாது.  தற்போது மலையில் தங்கியுள்ள  நம்பூதிரி தன் அனுபவம் பற்றி கூறியதாவது: சபரிமலையில் கடந்த கார்த்திகை முதல்நாள் நடை திறந்த போது கிடைத்த அனுபவத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. பயம் கலந்த சந்தோஷத்தில் திக்கு முக்காடினேன்.  இருமுடி கட்டு ஏந்தி வந்து, சில வினாடிகளே தரிசித்து செல்லும் ஐயப்ப விக்ரகத்தின் அருகில் கண்குளிர தரிசித்து பூஜிப்பது எனக்கு கிடைத்த பாக்கியம். கடந்த ௧௧ மாதத்தில், யாரும் இல்லாத நாட்களில் காலையும், மாலையும் காயத்ரி மந்திரம் ஜபித்தேன். நடை அடைக்கப்பட்ட நாட்களில் விலங்குகள் நடமாட்டம் பற்றி  ஊழியர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். பாம்புகளை மட்டுமே பார்த்துள்ளேன்.

சபரிமலை வரும் பக்தர்கள் இங்குள்ள சூழ்நிலைகளை உணர வேண்டும். காடு, விலங்குகளை பாதுகாக்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க வேண்டும். 41 நாள் விரதத்தை சரியாக கடை பிடிக்க வேண்டும்.  ஐப்பசி கடைசி நாள் இரவில் படி இறங்க வேண்டும் என நினைக்கும் போது மனதில் பாரமாக இருக்கிறது. சபரிமலை அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. இங்கிருந்து சென்ற பின், ஏற்கனவே பணிபுரிந்த பாலக்காடு சிறுபுழசேரி ஐயப்பன் கோயிலில் பூஜை செய்வேன்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar