Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வர்ணிக்க வார்த்தை இல்லை சபரிமலை பூஜை நாள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சபரிமலையில் பூஜை செய்யும் தாழமண் தந்திரி குடும்பம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2017
04:11

சபரிமலை வழிபாட்டில், பூஜை முறைகளில் தாழமண் தந்திரிகள் எடுக்கும் முடிவு இறுதியானது. சபரிமலையில் 18 படி ஏறும் பக்தர்கள் இருமுடி கட்டி இருக்க வேண்டும். மற்றவர்கள் வடக்கு வாசல் வழியாக செல்லலாம். இருமுடி இல்லாமல் படியேறும் உரிமை தாழமண் தந்திரி, பந்தளம் மன்னர் குடும்பத்திற்கு மட்டுமே உண்டு. பம்பை நதிக்கரையிலுள்ள செங்கன்னூரில் தாழமண் குடும்பத்தினர் வசிக்கின்றனர்.  ஆந்திராவைப் பூர்வீகமாக கொண்ட இவர்கள் இங்கு வந்ததும், இவர்களுக்கு தாழமண் தந்திரி என பெயர் வந்ததும் சுவாரஸ்யமான கதை. கேரளாவை உருவாக்கிய பரசுராமர், கோயில்களில் பூஜை நடத்த தந்திரிகளை நியமிக்க விரும்பினார்.  ஆந்திராவை சேர்ந்த, வேதம் படித்த இரு பிராமணர்களை அழைத்து வந்தார்.  அவர்களை பரிசோதிக்க எண்ணி, ஆற்று வெள்ளத்தை கடந்து மறுகரைக்கு வருமாறு கூறினார். ஒருவர் நீரின் மீது நடந்து மறுகரைக்கு வந்தார்.  மற்றொருவர் வெள்ளத்தை தன் சக்தியால் கட்டுப்படுத்தி நடுவில் பாதை ஏற்படுத்தி கரையேறினார்.  பரவசம் அடைந்த பரசுராமர், நீரின் மேல் நடந்தவருக்கு தரணநல்லூர் தந்திரி என்று பெயரிட்டார் (தரணம் என்பது சோதனை. சோதனையை கடந்தவர்). நீரை கட்டுப்படுத்தி மறுகரைக்கு வந்தவருக்கு தாழமண் தந்திரி என்று பெயரிட்டார். பரசுராமர் ஆசியுடன் சபரிமலை பூஜை பொறுப்பை ஏற்றார் தாழமண் தந்திரி. தற்போது இவரது குடும்பத்தில் நான்கு தந்திரிகள் உள்ளனர். மூத்த இருவரும்  பூஜை  செய்யவில்லை. கண்டரரு ராஜீவரரு, கண்டரரு மகேஷ் மோகனரரு ஆகியோர் சுழற்சி முறையில் ஆண்டுக்கு ஒரு முறை பூஜை செய்வர். ஆண்டுதோறும் ஆவணி முதல் நாளில் இவர்கள் பொறுப்பேற்பர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar