பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிராவாகும். இந்த அகால நேரத்தில் பராசக்தியானவள் பைரவி என்னும் பெயரில் நடமாடுகிறாள். அவளுடன் இறைவனும் பைரவராகத் தலத்தை வலம் வருவாராம். அதனால் சித்தர்கள் அந்த நள்ளிரவு நேரத்தில் த்ரிபுர பைரவியையும், பைரவரையும் தியானிக்கிறார்கள்.