கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் சித்தலிங்கேஸ்வர சுவாமி கோவில், பேவநத்தம் மலை மீதுள்ள சிவாநஞ்சுடேஸ்வர சுவாமி, ஜெக்கேரி அருகே மல்லிகார்ஜூன சுவாமி, மஞ்சுபெட்டா மலை கிராமத்தில் உள்ள கைலாசநாதர் சுவாமி, தளி அருகே தாளவேந்திரம் கிராமத்தில் உள்ள மாதேஸ்வர சுவாமி கோவிலில், நேற்று திங்கட்கிழமையை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில், கெலமங்கலம் சித்தலிங்கேஸ்வர சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.