கொடுமுடி: சிவகிரி ஆதீனத்தில், குரு பூஜையை முன்னிட்டு, இசை விழா நடந்தது. கொடுமுடி வட்டாரம், சிவகிரியில் முதல் ஆதிசைவ ஆதீனமான சிவசமய பண்டித குரு சுவாமிகள் திருமடாலயத்தில், மரகத சுவாமிகளின், 32வது ஆண்டு ஆராதனை விழா மற்றும் குரு பூஜையை முன்னிட்டு இசைவிழா நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, இசை கலைஞர்கள் நாதஸ்வரம், தவில் மூலம் இசை விழா நடத்தினர். சிறந்த இசை கலைஞர்களுக்கு நாதஸ்வர கலா ரத்னா, தவில் கலா ரத்னா, சிவ நந்தி ஆகிய பட்டங்களை சிவசமய பண்டித குரு சுவாமிகள் வழங்கினார்.