Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குளத்துப்புழை குளத்துப்புழை
முதல் பக்கம் » வழிபாட்டு இடங்கள்
அரசனாக அச்சன் கோவிலில் ..
எழுத்தின் அளவு:
அரசனாக அச்சன் கோவிலில் ..

பதிவு செய்த நாள்

17 நவ
2017
04:11

சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு அடுத்து பிரசித்தி பெற்றது அச்சன்கோவில் ஆகும். ஐயப்பனின் படை வீடுகளில் ஒன்று. அச்சன் கோவில் அரசனான ஐயப்பன் வீற்றிருக்கும் பகுதி தமிழக, கேரள எல்லையிலுள்ள செங்கோட்டையிலிருந்து 28 கி.மீ தூரத்தில் உள்ளது. கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இயற்கை சூழ்நிலையில் இந்த தலம் அமைந்துள்ளது. மண்டல மகோற்ஸவ விழா, இத்தலத்தின் முக்கிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

அச்சன்கோவில் பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்டது. பல தலங்களில் உள்ள ஐயப்பன் விக்கிரகங்கள் தீயாலும், இதர இயற்கை சக்திகளாலும் பாதிப்படைந்து மாற்றப்பட்டவை. ஆனால் அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் மட்டும் பழைய விக்ரகம் இன்றும் உள்ளது. கார்த்திகை மாதம் 30ம் தேதி புனலூர் கருவூலத்திலிருந்து அச்சன்கோவில் அரசனுக்கு திரு ஆபரணங்கள் கொண்டுவரப்படும். மார்கழி முதல்நாள் காலை கொடியேற்றத்துடன் திருவிழா நடக்கும். ஐயப்ப தலங்களிலேயே 10 நாள் திருவிழா நடப்பது சபரி மலையிலும் அச்சன் கோயிலிலும் மட்டுமே ஆகும். அச்சன்கோவிலில் நடக்கும் விழாவில் 9வது நாளன்று தேரோட்டம் நடத்தப்படும். மற்ற ஐயப்ப தலங்களில் தேரோட்டம் கிடையாது. ஐயப்பன் பயன்படுத்திய வாள் இத்திருத்தலத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இங்கு சிவன், பார்வதி சன்னிதிகளும் உள்ளன. இந்த சன்னிதிகளுக்குப் பின்னால் சுவாரஸ்யம் மிகுந்த பல கதைகள் உண்டு.இந்த கோயிலுக்கு ஒரு விசேஷமுண்டு. விஷப்பூச்சிகள் தீண்டினால் நள்ளிரவு நேரமானாலும் இங்குள்ள ஐயப்பன் கோயிலுக்கு சென்று மணி அடித்தால், நடை திறக்கப்பட்டு அந்தக் கோயிலில் உள்ள தந்திரி, மந்திரித்த தீர்த்தமும் ஐயப்பனின் விக்ரகம் மீதுள்ள ந்தனமும் தருவார். அவைதான் விஷக்கடிக்கான மருந்து. அதை அருந்தினால், உடலில் இருந்து முற்றிலுமாக விஷம் இறங்கி, உடல் பூரண குணமடைகிறது. இந்த நடைமுறை இன்றும் அந்த ஊரில் நடைமுறையில் உள்ளது.இதற்காக வைத்தியரை நாடி யாரும் செல்வதில்லை.

 
மேலும் வழிபாட்டு இடங்கள் »
temple news

குளத்துப்புழை நவம்பர் 20,2017

கேரளாவில் குளத்துப்புழை என்ற இடத்தில் சாஸ்தா கோயில் உள்ளது. பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ... மேலும்
 
temple news

ஆரியங்காவு நவம்பர் 20,2017

சபரிமலையில் பிரம்மச்சரியம் காக்கும் சாஸ்தா ஆரியங்காவில் மாப்பிள்ளை ஐயப்பனாக கிரகஸ்த (குடும்பம்) ... மேலும்
 
temple news
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள சொரிமுத்தய்யனார் கோயிலில், தர்ம சாஸ்தாவான ஐயப்பனே இங்கு ... மேலும்
 
temple news

பந்தளம் நவம்பர் 20,2017

சபரிமலையில் இருந்து 88 கி.மீ தூரத்தில் திருவனந்தபுரத்தையும், கோட்டயத்தையும் இணைக்கும் பாதையில் உள்ளது ... மேலும்
 
temple news
ஆரியங்காவில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் உள்ளது மாம்பழத்துறை தலம். புஷ்கலையை மணம் முடித்த சாஸ்தா தனது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar