நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. சபரிமலை சீசன் தொடங்கிய நிலையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வர தொடங்கியுள்ளனர். இவர்கள் கோயிலுக்கு வந்து தரிசனம் நடத்துகின்றனர். நெரிசலை தவிர்க்க கோயிலை சுற்றி, மூங்கில் கம்புகளால் தடுப்பு ஏற்படுத்தி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போது மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்பட்டு அதன் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுப்பப்படுகின்றனர். பக்தர்களின் பைகளும் சோதனைக்கு உட்படுத்தப் படுகிறது. சபரிமலை சீசன் முடியும் வரை இந்த சோதனை நடைபெறும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.