சிவபெருமான்மீது திருவிசைப்பா பாடியவர் திருமாளிகைத்தேவர், காவிரியில் நீராடி, மலர் பறித்து வந்த போது, எதிரில் சவ ஊர்வலம் வந்தது. பூஜிக்கும் மலர்களுக்கு தீட்டு வருமே என எண்ணி, தன் தவ சக்தியால் பூக்கூடையை வானில் அந்தரத்தில் நிறுத்தி யதோடு, இறந்தவரையும் உயிர் பெறச் செய்தார். இது கண்டு மக்கள் அதிசயித்தனர்.