பதிவு செய்த நாள்
22
நவ
2017
11:11
கூடலூர்: சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு கூடலூர் அருகே அன்னதானம் வழங்கும் முகாம் துவங்கப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு வாகனங்களில் ஏராளமானோர் செல்வர். அதே போல் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து சபரிமலைக்கு நடந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் அதிகம் உள்ளனர். இந்த பக்தர்களுக்கு சபரிமலை சீசன் முடியும் வரை அன்னதானம் வழங்கும் முகாம் கூடலூர் அருகே குறுவனத்துப்பாலத்தை ஒட்டியுள்ள பகவதியம்மன் கோயிலில் துவக்கப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கான பார்க்கிங் வசதி, கழிப்பறை மற்றும் குளிக்கும் வசதி செய்து தரப்பட்டு உள்ளது. மேலும், பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்கான வசதியும் உள்ளது. தினந்தோறும் இங்கு காலை, மதியம், இரவு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கூடலூர் அகில்பாரத ஐயப்ப சேவா சங்கமும், செல்வராஜ் அன்னதான கமிட்டியும், ஒக்கலிக வியாபாரிகள் சங்கமும் செய்துள்ளது. ஒருங்கிணைப்பாளர்களாக சுசீந்திரன், கர்ணன், முத்து, செல்வன், முருகேசன் உள்ளனர்.