Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அஸ்திர தேவர் சாஸ்த்திர நீதிகள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஞானத்தை தரும் லலிதாஸஹஸ்ர நாமம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 நவ
2017
05:11

லலிதாஸஹஸ்ர நாமத்தில் ஓர் நாமம்
நக தீதிதிஸஞ்ஜன்ன நமச்ஜன தமோ குணா

அம்பிகையின் கால நகத்திலிருந்து வரும் ஒளியானது பக்தர்களுடைய தமோகுணத்தை நீக்க வல்லது. அன்னையினுடைய கால் நகத்திலிருந்து வரும் ஞான ஒளியானது தம்மை பணியும் அடியாளர்களுடைய அக்ஞானத்தை நீக்கி விடுகிறது. இருள் இருக்குமிடத்தில் ஒளியை கொண்டு சென்றால் இருள் நீங்கி விடும். அதுபோல் ஞானம் தோன்றுமிடத்து அஞ்ஞானம் அகன்று விடுகிறது. அன்னை பராசக்தி ஞான வடிவினள் அவனையே சதா நினைத்தும் போற்றியும் வணங்கும் அடியாருடைய தமோகுணத்தை அன்னை நீக்குகிறாள். அன்னை பேரறிவு பிழம்பு ஆதிசங்கரர் அன்னை மீனாட்சியை தாம் இயற்றிய மீனாட்சி பஞ்சரத்னத்தில் ஸ்ரீமத் சபா நாயகி என வர்ணிக்கிறார்.

சபை என்பது அறிவை குறிக்கும் அன்னை அறிவுக்கு தலைவி அன்னையை உபாசிப்பவர்களும் அறிவுப் பொருளையே அடைகின்றனர். அறிவு மயமாகின்றனர். மகாகவி காளிதாசர் ஏதும் அறியாத பாமரனாக இருந்தார். ஆனால் அம்பிகையிடத்து தூய பக்தி பூண்டு வந்ததின் விளைவு அவர் சகல கலை ஞானங்களையும் ஓதாது உணர்ந்தார். நிறை ஞானியாக விளங்கினார். பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் பள்ளிக்குச் செல்லாதவர், கல்வி கல்லாதவர் ஆனால் அன்னை பவதாரினியின் அடிநிழலையே அண்டி இருந்தார். வேதாந்த தத்துவமெல்லாம் அவரது வாழ்க்கை மயமானது. யாதானும் தொழில் செய்வோம் யாவும் அவள் தருவாள் என்கிறார் மகாகவி பாரதியார். அன்னையை சரணடைந்து அவளையே எண்ணி இருப்போருக்கு சகல ஞானத்தையும் எளிதில் அவள் வழங்கி விடுவாள். மிகப்பெரிய பொறுப்பிலிருக்கும் ஒரு நபர் எளிய காரியங்களை மிகச் சாதாரணமாக செய்து விடுவார் அதுபோல அம்பிகை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி அன்னைக்கு, ஞானாம்பிகைக்கு தன்னை வணங்கும் அடியாரின் தமோகுணத்தை நீக்கி நிறை ஞானத்தை வழங்குவது கை வந்த கலையாகும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar