● இமயமலையில் உள்ள பத்ரிநாத் கோயில், மே முதல் வாரம் திறக்கப்பட்டு நவம்பர் முதல் வாரத்தில் மூடப்படும். அப்போது ஏற்றப்படும் தீபம், மீண்டும் மே மாதம் வரை எரிந்தபடி இருக்கும். ● காசியில் பல்லிகள் இருந்தாலும் ஒலிப்பதில்லை. இந்நகரைச் சுற்றி, கருடன் பறப்பதில்லை. ● அம்மன் சன்னதி இல்லாத சிவன் கோயில் காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோயில். ● கரூர் மாவட்டம் குளித்தலை – மணப்பாறை வழியில் உள்ள ஐவர்மலை (ரத்தினகிரி) முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் சிறிது நேரத்தில் தயிராகும் அதிசயம் நடக்கிறது. இந்த மலை மீது காகங்கள் பறப்பதில்லை. ● ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பதில்லை. ● கும்பகோணம் திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயிலில் தயாராகும் நைவேத்யத்தில் உப்பு சேர்ப்பதில்லை. ● திருவண்ணாமலை அண்ணாமலையார் ராஜகோபுரத்திற்கு அருகிலுள்ள வாசல் வழியாகத் தான் புறப்படுவார். ● பெருமாளின் இடது கையில் சங்கு இருக்கும். ஆனால் கடலூர் மாவட்டம் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளின் வலது கையில் மாறி இருக்கிறது. ● கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒரே இடத்தில், கோவிந்தராஜ பெருமாளையும், நடராஜரையும் தரிசிக்கலாம். சிவனுக்குரிய திருவாதிரை, பெருமாளுக்குரிய வைகுண்ட ஏகாதசி விழா நடப்பது இங்கு மட்டுமே. ● திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன், அமர்ந்த கோலத்தில் பெரிய திரு மேனியாக இருக்கிறாள். மூலிகையால் ஆன இச்சிலையின் அளவுக்கு, பெரிய சிலை வேறில்லை. ● மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 14 கோபுரங்கள் உள்ளன. இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வளர்வதில்லை. ● ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில், பெருமாள் கோயில் போல, துளசி தீர்த்தம் தரப்படுகிறது. ● தேனி மாவட்டம், கம்பம் அருகிலுள்ள சுருளிமலை திருநீறு குகையில் விபூதி அள்ள, அள்ள வந்து கொண்டே இருக்கும். ● தேனி மாவட்டம் தெப்பம்பட்டி வேலப்பர் கோயிலில் உள்ள மூலவர் சுயம்பு மூர்த்தி. இங்குள்ள மாமரத்தின் அடியில் ஊற்று நீர், பொங்கி வந்து கொண்டேயிருக்கிறது. ● திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார் குறிச்சியில் உள்ள நடராஜர் சிலை ஒரே கல்லினால் ஆனது. தட்டினால் வெண்கல ஓசை வரும். ● கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரளபுரம் சிவன் கோயிலில் நிறம் மாறும் அதிசய விநாயகர் இருக்கிறார். சந்திர காந்தக் கல்லால் ஆன இவர், ஆவணி முதல் ஆறு மாதம் வெள்ளை நிறமாகவும், மாசி முதல் ஆறு மாதம் கருப்பாகவும் மாறுகிறார்.