Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அரிய செய்திகள் அறிவோமா! எல்லாம் உங்கள் கையில்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனம் திருந்து மகனே!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2017
06:11

ஒரு தந்தை, தன் மகன் கெட்ட வழியில் செல்வது கண்டு மனம் வருந்தினார். புத்திமதி சொல்லி பார்த்தார். அவன் கேட்கவே இல்லை. தொடர்ந்து தவறு செய்தான்.  அவனது ஒவ்வொரு செய்கையும், இயேசுவின் கைகளில் அடிக்கப்பட்ட ஆணியைப் போல் அவரது இதயத்தில் வலித்தது. அந்த ஆணிகளையே அவனைத் திருத்தும் ஆயுத மாக்கினார் தந்தை. அவன் ஒவ்வொரு தவறு செய்யும் போதும், அருகில் இருந்த  மரத்தில் ஒரு ஆணியை அடித்தார். இப்படியே ஐநூறுக்கும் மேற்பட்ட ஆணிகள் பதிந்து விட்டன. மரத்தில் இருந்து பிசின் கசிந்தது. பார்ப்பதற்கு அம்மரம் அழுவது போல் தோன்றியது. ஆரம்பத்தில் இதைக் கண்டு கொள்ளாத மகன், ஒருநாள் ஏன் இந்த மரத்தில் ஆணியடித்து நாசப்படுத்துகிறீர்கள். அதில் வழியும் பிசின், அம்மரம் அழுவது போன்ற தோற்றத்தை உண்டாக்கவில்லையா? அதன் உருவம் விகாரமாகவில்லையா?” என்றான்.தந்தை சொன்னார்.

மகனே! நீ ஒவ்வொரு தவறு செய்யும் போதும், என் இதயத்தில் ஆணி அடிக்கப்பட்டது போல் இருக்கும். அதைக் குறிப்பிட்டுக் காட்டவே இம்மரத்தில் ஆணியடிப்பேன். இம்மரம் அழுவது போல், என் இதயமும் உன் செய்கை என்ற ஆணியின் குத்தலை தாங்காமல் அழுகிறது,” என்றார். இந்த பதில் மகனை சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. மனம் மாறிய அவன், அம்மரத்துக்கு தண்ணீர் விட்டான். செய்த பாவங்களுக்கு மனமுருகி ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டான்.  ஒவ்வொரு முறை அழும்போதும் ஒவ்வொரு ஆணியாய் பிடுங்கினான். இப்போது மரத்தில் பிசின் வடிவது நின்று விட்டது. அவனது தந்தை மகிழ்ந்தார். ஒருநாள் அவர் இறந்து விட்டார். அவர் ஆணியடித்த மரத்திலுள்ள, வடு மட்டும் மாறாமல் இருந்து அம்மனிதனை குத்திகாட்டிக் கொண்டே இருந்தது.தவறு செய்வது மனித இயல்பு.  ஆனால் பெரியவர்கள் சொல்வதை கேட்டு மனம் திருந்துங்கள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar