பதிவு செய்த நாள்
27
நவ
2017
12:11
திருப்பூர் : திருப்பூர், தாராபுரம் ரோடு, பாதை கருப்பராயன் கோவில் அருகில் உள்ள மகாலட்சுமி சுவாமிகள் கோவிலில், டிச., 1ல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, வரும் 30ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, முதல்கால யாக பூஜைகளுடன், கும்பாபிஷேக விழா துவங்குகிறது. வரும் 1ம் தேதி, காலை 6:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜைகளை தொடர்ந்து, நாடி சந்தானம், மகா பூர்ணாகுதி, கலசம் புறப்பாடு நடக்கிறது. அன்று காலை, 9:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள், விநாயகர், பாலசுப்ரமணியர், மகாலட்சுமி சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு, மகான் மகா லட்சுமி சுவாமிகள், பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். பகல், 12:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ மகாலட்சுமி கோவில் தர்ம சேவா அறக்கட்டளை, ஸ்ரீ லட்சுமி நாராயண பீடம், ஆன்மிக பேரவை மற்றும் மகளிரணி, இளைஞரணி அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.