பெருந்துறை: வாழும் கலை சார்பில், ருத்ர பூஜை விழா நடந்தது. பெருந்துறையில், வாழும் கலை அமைப்பு சார்பில், நேற்று மாலை, ருத்ர பூஜை விழா நடந்தது. பெங்களூரு தலைமை ஆசிரமத்தைச் சேர்ந்த மோகன்ஜி சுவாமிகள் பங்கேற்ஹார். ஸ்படிக லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மேற்கொண்டார். இதன் பின், ருத்ர பூஜை விழா நடந்தது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.